அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் தற்போது கோவை மாவட்டத்தை சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் இருவர் திமுகவில் இணையுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
ஏற்கனவே கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும் அதிமுக சட்டமன்ற தேர்தலில் கைப்பற்றியது. பின்னர் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 66 இடங்களில் 62 இடங்களை திமுக வென்றது. இந்த நிலையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தொகுதி பிரச்சனை காரணமாக முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொள்ளாச்சியில் நடைபெறும் நிகழ்சியில் முக ஸ்டாலின் முன்னிலையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் இருவர் இணை உள்ள நிலையில் அதிமுக எம்எல்ஏவான அமுல் கந்தசாமி முதலமைச்சரை தொகுதி பிரச்சனை சம்பந்தமாக சந்திக்க இருப்பது கோவை அதிமுகவை அதிர வைத்துள்ளது.