அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். இந்த மனுவிற்கு பதிலளிக்க கோட்டாட்சியர் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த வழக்கிற்காக, எடப்பாடி பழனிச்சாமி பதில் மனுவை உச்சநீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்துள்ளார்.
அதில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினரே கிடையாது. அதிமுகவுக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை. அவரால் அதிமுகவில் தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது, நிறைய பொருட்கள் காணாமல் போய் உள்ளன. அப்படிப்பட்ட ஒருவரிடம் அதிமுக சாவியை கொடுப்பது முறையாக இருக்காது ?
அதிமுகவிற்கு தொடர்பில்லாத ஒருவரிடம் அலுவக சாவியை கொடுக்க கூடாது. ஓபிஎஸ்ஸின் முறையீட்டு மனு விசாரிக்க தகுதியற்றது. எனவே அதை தள்ளுபடி செய்ய வேண்டும் என எழுத்துப்பூர்வமாக தனது பதில் மனுவில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை தற்போது உச்சநீதிமன்றத்தில் தொடங்கிய நிலையில் மீண்டும் எடப்பாடிக்கு ஆதரவான தீர்ப்பாக ஓபிஎஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதிமுக சாவியை எடப்பாடியிடம் வழங்கிய உத்தரவு செல்லும் என உத்தரவிடப்பட்டுள்ளது.