கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக அனைத்து கல்வி நிறுவனகளுக்கு விடுமுறை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் யாரும் கூட்டமாக கூட வேண்டாம், தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை, கர்நாடகா கேரளா எல்லை ஓரத்தில் உள்ள திரையரங்கு , வணிக வளாகம் மூட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவ கல்லூரி தவிர அங்கன்வாடி உட்பட அனைத்து கல்லூரிகளுக்கு மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை விட உத்தரவு என்று முதல்வர் பிறப்பித்துள்ளார்.