அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது உறுதிகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது தொடர்பாக பல்வேறு பிரச்சனைகள் எழுந்ததால் அதை எப்படி சமாளிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை செய்து முடித்து இருக்க செங்கோட்டையன் , தங்கமணி உள்ளிட்ட 5 அமைச்சர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் இருந்த அமைச்சர்கள் நேற்று தலைமைச் செயலாளரிடம் ஆலோசனையில் ஈடுபட்டனர்.அந்த ஆலோசனைகள் தான் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
அண்ணா பல்கலை கழகத்தை இரண்டாக பிரித்தால் ஏற்படும் நிதி சிக்கலை சமாளிப்பதற்கு குழு ஒன்றை அமைப்பதாகவ முடிவு செய்திருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான உத்தரவு என்பது விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகின்றது.