Categories
Uncategorized

#Breaking: மேற்கு வங்கத்தில் ஜூலை 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு!

மேற்கு வங்கத்தில் ஜூலை 31 வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் ஜூன் 30 வரை  ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது  மேலும் ஒருமாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. COVID-19 பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக ஜூலை 31 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பதாக மேற்கு வங்க முதல்வர்  அறிவித்தார்.

அம்மாநிலத்தின் COVID-19 நிலைமையைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து  முதலமைச்சர் மம்தா பானர்ஜி  தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் பாஜகவின் மேற்கு வங்கத் தலைவர் திலீப் கோஷ், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த மனோஜ் ஹவுலதர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஸ்வபன் பானர்ஜி, காங்கிரஸைச் சேர்ந்த பிரதீப் பட்டாச்சார்யா ஆகியோர் கலந்து கொண்டனர். மேற்கு வங்கத்தில் இதுவரை 14,728 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |