சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் ஏ.பி.சாஹி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கல்கத்தா , கர்நாடகா , சென்னை போன்ற மிக முக்கியமான உயர்நீதிமன்றத்தில் சென்னை உயர் நீதிமன்றம் பழமையான நீதிமன்றம் ஆகவும் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வரக் கூடிய மிக முக்கியமான வழக்குகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்தால் கையாளப்பட்டது என்பதும் ஒரு மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
அரசியல் தளங்களில் இருந்து மிக மிக முக்கியமான விஷயமாகவும் , பெருமையான விஷயம் கூட. பொது நல வழக்குகள் அதிகம் தாக்கல் செய்யப்பட கூடிய ஒரு உயர் நீதிமன்றங்களில் சென்னை உயர்நீதிமன்ற முதன்மை இடத்தில் இருப்பது , மிக முக்கியத்துவம் வாய்ந்த விஷயம்.அரசியல் ரீதியில் வழக்குகள், நாட்டிற்கு சட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஏதுவாக பல்வேறு வழக்குகளை விசாரிபதில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முதன்மையாக இருக்கிறது.
அத்தகைய பாரம்பரியமிக்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஒருவர் பொறுப்பு ஏற்கிறார் என்பது பெரிய விஷயம்.சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமணி தன்னை மேகாலயா நீதிமன்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட மிக முக்கியமானது. ஒரு பெரிய நீதிமன்றத்தில் இருந்து கொண்டு ஒரு சிறிய மாநிலத்திற்க்கு மாற்றுவதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து தான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக சொல்லப்பட்டது.
அந்த அளவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் பரப்பளவில் மட்டுமல்ல , அது எடுத்து விசாரிக்கும் வழக்குகளிலும் மிகப்பெரிய நீதிமன்றமாக தான் வருகிறது.அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பொறுப்பு என்பது மிக மிக முக்கியமான ஒன்றாகத்தான் பார்க்கப்படுகிறது.இந்நிலையில் பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக மற்றம் செய்யப்பட்டுள்ளார்.