Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : ”அதிமுக MP குற்றவாளி” சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு …!!

ஸ்ரீபெரும்புதூர் முன்னாள்  அதிமுக எம்பி ராமச்சந்திரன் குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி அதிமுக எம்பியாக  2014 முதல் 2019 வரை இருந்தவர் கே. என் இராமச்சந்திரன். இவர் கல்லூரி விரிவாக்கத்துக்கு சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் கடன் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கு எம்.பி , எம்.எல்.ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.

சிபிஐ தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணை பல கட்டங்களை கடந்து வந்த நிலையில் இன்று லஞ்ச வழக்கில் ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் அதிமுக எம்பி ராமச்சந்திரன் குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |