ATM சென்டரில் ரூ 200 எடுத்தால் ரூ 500 வந்தது சேலத்தில் வாடிக்கையாளரை குஷியில் ஆழ்த்தியது.
சேலம் மாவட்டம் SBI ATM_இல் வாடிக்கையாளர்கள் ரூ 200 வேண்டும் என்று எடுத்தால் ரூ 500 வந்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் போட்டிப்போட்டுக் கொண்டு பணம் எடுத்தனர். இதனை தொடர்ந்து இந்த தகவல் சம்மந்தப்பட்ட வங்கி அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
விரைந்த வங்கி அதிகாரிகள் சம்மந்தப்பட்ட ATM சாதனத்தை ஆய்வு செய்த போது அதில் 200 ரூபாய் பணம் வைக்கவேண்டிய ரேக்கில் ரூ 500 வைக்கப்பட்டதே பணம் மாறி வரக் கரணம் என்று ஓமலூர் பண்ணப்பட்டியில் உள்ள அந்தATM சென்டரை பூட்டு போட்டு சென்றனர். மேலும் பண இழப்புக்கு பணத்தை தவறாக வைத்த தனியார் நிறுவனமே பொறுப்பு என்றும் வங்கி அதிகாரிகள் அதிகாரிகள் தெரிவித்தனர்.