Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

#BREAKING : ”ரெண்டு தொகுதியிலும் கோளாறு” பொதுமக்கள் புகார் ….!!

வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் அங்கங்கே வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி , விழுப்புரம் மாவட்டத்தின்  விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி , புதுச்சேரி மாநிலத்தின்  காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து இரண்டு வாரங்களாக அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.இதில் நாங்குநேரி தொகுதியில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக கூட்டணி வேட்பாளர் நாராயணன் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Related image

அதேபோல் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் , திமுக வேட்பாளர் புகழேந்தி, அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் உள்ளிட்ட 8 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.இந்நிலையில் பரபரப்பாக நடைபெற்று வருகின்ற இடைதேர்தல் பரப்புரை முடிந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் , நாங்குநேரி சட்டமன்ற தொகுதி தெய்வநாயகிபேரியில் உள்ள வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு 45 நிமிடம் தாமதமாக தொடங்கியது.

Related image

அதே போல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தொரவி ஊராட்சி வாக்குச்சாவடி எண்.49ல் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு , நான்குனேரியில் களக்காடு-வடுகட்சிமதில் இந்து ஆரம்பப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது பொதுமக்கள் அனைவரும் உற்சாகமாக தங்களின் ஜனநாயக கடமையை  செய்து வருகின்றனர்.

Categories

Tech |