இந்த வழக்கில் முன்பிணை கோரி டெல்லி நீதிமன்றத்தில் சிதம்பரம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஆகஸ்ட் 20ஆம் தேதி டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, செப்டம்பர் 5ஆம் தேதி அவர், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுப்படி டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
பிணைக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் சிதம்பரம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில் ப.சிதம்பரம் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் , வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி மறுத்து , 1 லட்சம் நிபந்தனை தொகை செலுத்த சொல்லி ப.சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. அதே வேலையில் அவர் அமலாக்கத்துறை காவலில் இருப்பதால் இந்த பிணை அவருக்கு உடனடி பலன் கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.