சென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் ஜனவரி 20, 22, 24, 26 ஆம் தேதி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நான்கு நாட்களிலும் 6 – 10 மணி வரை காமராஜர் சாலையில் கலங்கரை விளக்கம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை வாகனம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்ணா சதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம், வஜாலா சாலை விருந்தினர் மாளிகை அருகே தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.