தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி அரசும் பேனர் வைக்க தடை கோரிய வழக்கை உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்துள்ளது.
டிராபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தமிழகம் முழுவதும் பேனர் கலாச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் , ஏனென்றால் பேனர் விழுந்து விழுந்து ஏராளமான சாலை விபத்துகள் , மரணம் ஏற்படுகிறது.இது தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் அளவிற்கு பெரிய ஒரு பிரச்சனையாக உருவாகி வருகிறது. எனவே உச்ச நீதிமன்றம் தலையிட்டு உடனடியாக தமிழகம் முழுவதும் பேனர் வைக்க தடை விதிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டு இருந்தது.
மேலும் அதில் மற்றொரு முக்கிய காரணமும் சொல்லப்பட்டது. அதில் சீனா அதிபர் ஜின்பிங் தமிழகம் வந்த தமிழக அரசு_க்கு பேனர் வைக்க ஸ்பெஷல் அனுமதி கோரி வழங்கப்பட்டது இதுபோன்று அரசுகள் எடுக்கும் முன்னெடுப்புகள் என்பது பொது மக்களிடம் தவறான எடுத்துக்காட்டாக அமைந்து விடும் எனவே அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் அல்லாமல் அரசுகளும் சேர்ந்து இந்த பேனர் வைக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணையில் உச்சநீதிமன்றம் இந்த வழக்கிற்கான அடிப்படை முகாந்திரம் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் தமிழகம் முழுவதும் பேனர்களை வைக்க கூடாது என்பதற்கு அரசு சார்பில் அரசு தான் முடிவெடுக்க வேண்டும். இது அரசின் உரிமை சார்ந்த விஷயம் என்று நீதிபதிகள் தெளிவுபடுத்துகிறார்கள். பேனர் கலாசாரத்தை தமிழகத்தில் ஒழிக்க வேண்டும் என்று அனைவரும் பேசி வரக்கூடிய இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.