Categories
தேசிய செய்திகள்

BREAKING: பெங்களூர்- சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் 10 நாட்களுக்கு ரத்து!

சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது.

இதுவரை இந்த வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 206ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.

இந்த வைரஸ்சை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இந்நிலையில் சென்னை- பெங்களூர் சதாப்தி விரைவு ரயில் வரும்  20 முதல் 30 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. மேலும் யஸ்வந்த்பூர்- மங்களூர் விரைவு ரயில்  5 நாட்களுக்கு இரு தடங்களிலும் ரத்து செய்யப்பட்டுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |