புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா நிவாரணமாக முதல் தவணை ரூபாய் 1,500 நாளை முதல்வர் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்த தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாநிலங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. ஊரடங்கு காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகின்றது.
தமிழகத்தை போன்று புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 3000 ரூபாய் வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது நாளை முதல் முதல் தவணையாக 1,500 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் வங்கிக்கணக்கில் முதல் தவணை ரூ, 1,500 செலுத்தப்பட்டு வருகின்றது.