கொரோனாவால் மருத்துவர் செலவினங்களை எதிர்கொள்ள முடியாத மக்களுக்கு 5 லட்சம் பிணையிலா கடன் வழங்க வங்கிகள் முடிவெடுத்துள்ளது.
இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு சில மாநிலங்களில் தொற்று குறைந்து கொண்டு வருகின்றது. மேலும் ஊரடங்கு காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றன.
இந்நிலையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கொரோனாவால் மருத்துவர் செலவினங்களை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் மக்களுக்கு ரூபாய் ஐந்து லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்க எஸ்பிஐ, ஐஓபி, இந்தியன் போன்ற வங்கிகள் முன்வந்துள்ளன. மேலும் 8.5% வட்டியில் வழங்கப்படும் இந்தக் கடனை 5 ஆண்டுக்குள் திரும்ப செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.