தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க ஜெ அன்பழகனுக்கு தடை விதித்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் துவங்கியது.இதில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் ஆளுநர் உரையில் பதிலளித்து பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சரை ஒருமையில் பேசியதாகவும் , அவரை கைநீட்டி பேசுவதாகவும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து அவை முனைவரும் , துணை முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் அவரை உடனடியாக பேரவையில் நீக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் அன்பழகன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததால் இந்த பிரச்சனையும் முடிவுக்கு வந்தது. இருந்தபோதிலும் தீர்மானத்தை அவை முனைவர் கொண்டு வந்த காரணத்தால் இந்த கூட்டத்தொடர் முழுவதும் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகன் நீக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார் .