உத்தரப்பிரதேசத்தில் இருக்க கூடிய புலம்பெயந்த தொழிலாளாளர்கள் தங்களது சொந்த பகுதிக்கு செல்ல தடுப்பு வேலியை உடைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களுக்கு பணிகளுக்காக சென்ற தொழிலாளர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். சில நடைப்பயணமாகவே சொந்த ஊருக்கு திரும்பும் அவல நியையையும் காண முடிகிறது.
சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் போதிலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து இடம்பெயர்ந்து நடந்தே செல்வதை காண முடிகிறது. ஊரடங்கு உத்தரவால் உத்தரப்பிரதேசம் – மத்தியபிரதேசம் எல்லை பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்தியப்பிரதேசத்தில் இருக்கும் தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்கு திரும்ப முயன்றனர்.
#WATCH Migrant workers break police barricades at Uttar Pradesh-Madhya Pradesh border in Chakghat area of Rewa to enter into Uttar Pradesh. pic.twitter.com/GeerWaWzem
— ANI (@ANI) May 17, 2020
உத்தரப்பிரதேசம் – மத்தியப்பிரதேசம் எல்லையில் இருந்த தடுப்புகள் அனைத்தையும் உடைத்துவிட்டு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்குள் நுழைந்துள்ளனர். காவல்துறையின் கட்டுப்படுத்த முயன்றும் தடைகளை மீறி சென்றுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.