Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : பரூக் அப்துல்லாவின் தடுப்புக்காவல் ரத்து …!!

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவிற்கான தடுப்புக்காவல் நீக்கப்பட்டிருக்கிறது.

சென்ற வருடம் ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் குழப்பம் உருவாகி அரசியல் நடவடிக்கைகள் காரணமாக வன்முறை ஏதும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வர்கள் முப்தி மற்றும் பரூக் அப்துல்லாவின் , அவரின் மகன் ஒமர் அப்துல்லா ஆகியோரை ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் வீட்டுக்காவல் பின்னர் தடுப்புக்காவல் என்று வைக்கப்பட்டு இருந்தார்.

இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இதை தவிர பல்வேறு மனுக்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் பரூக் அப்துல்லாவின் தடுப்புக்காவல் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |