கோவிலின் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முசுவனூத்து அணைப்பட்டி பகுதியில் 300 ஆண்டுகள் பழமையான வீரியகாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் மர்மநபர்கள் கோவிலிலிருந்த 2 உண்டியல்களை பெயர்த்தெடுத்து சுமார் 500 மீட்டர் காட்டுப்பகுதிக்கு தூக்கி சென்று அதில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர்.
இதனை அடுத்து கோவிலின் நடையை திறந்த பூசாரியும், நிர்வாகியுமான கொண்டன் செட்டி என்பவர் உண்டியலை காணவில்லை என அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து காவல் நிலையத்திற்கு சென்று கொண்டன் செட்டி புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.