Categories
அரசியல் தேசிய செய்திகள்

#BREAKING: பாஜக படுமோசம்… போட்டியிட்ட அனைத்திலும் பின்னடைவு.. கடும் அதிர்ச்சியில் டெல்லி தலைமை …!!

ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற ஆறு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உத்திரபிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஒடிசா, ராஜஸ்தானில் இடைத்தேர்தல் நடந்த 6 எம்எல்ஏ தொகுதிகளில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

உ.பி:

உத்தரப் பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற மெயின்பூரி மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக பின்தங்கியுள்ளது. அங்கு போட்டியிட்ட சமாஜ்வாடி கட்சி டிம்பிள் யாதவ் 3,21,194 வாக்குகள் பெற்று முன்னிலையிலும், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ரகுராஜ் சிங் ஷக்யா 1,79,768 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

கத்தாலி தொகுதி இடைத்தேர்தலில் ராஷ்டிரிய லோக்தள வேட்பாளர் மதன் பையா 36,726 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். காதாலி தொகுதி பாஜக வேட்பாளர் ராஜ்குமாரி 26,799 வாக்குகள்  பெற்று பின்தங்கியுள்ளார்.

உபியின் ராம்பூர் சட்டமன்ற தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் முகமது அசிம் ராஜா 25 ஆயிரத்து 604 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளர் ஆகாஷ் சசேனா 19,229 வாக்குகள் பெற்று பின்னடைந்துள்ளார்.

ஒடிசா:

ஒடிசா மாநிலத்தின் பதம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பிஜு ஜனதா தளம் வேட்பாளர் பர்ஷா சிங் பரிஹா 59416 வாக்கு பெற்றுள்ளார். பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பிரதீப் புரோகித் 38, 065 வாக்கு எடுத்து பின்தங்கியுள்ளார்.

ராஜஸ்தான்:

ராஜஸ்தான் மாநிலம் சர்தர்ஷாஹர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட அனில் குமார் ஷர்மா 81289 வாக்குகள் பெற்றுள்ளார். பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் அசோக் குமார் 58, 037 வாக்குகள் பெற்று பின் தங்கியுள்ளார்.

சத்தீஸ்கர்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற பானுபிரதாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சாவித்ரி மனோஜ் மாண்டவி 33,823 வாக்குகள் பெற்றுள்ளார். பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பிரம்மனந்திடம் 21,487 வாக்குகள் பெற்று பின்தங்கியுள்ளார்.

பீகார்:

பீகாரில் இடைத்தேர்தல் நடைபெற்ற குர்ஹானி சட்டமன்ற தொகுதியில் ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் மனோஜ் சிங் முன்னிலை. ஜேடியு வேட்பாளர் மனோஜ் சிங் 54, 675 வாக்குகளும்,  இரண்டாம் இடத்தில் உள்ள பாஜக வேட்பாளர் கேதார் பிரசாத் குப்தா 53, 532 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

Categories

Tech |