ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து 60 பேர் நீரில் மூழ்கியதாக தகவல் வெளியாகியிருக்கிறது
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டினம் பகுதியில் உள்ளவர்கள் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கோதாவரி ஆற்றில் படகு மூலம் சவாரி செய்துள்ளனர். படகில் 60க்கும் மேற்பட்டோர் ஏற்றுக் கொண்டு சென்றதால் படகு எடை தாங்காமல் ஆற்றில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 60 பேரும் நீரில் மூழ்கி உள்ளனர்.
இதை கண்ட அங்குள்ள கோதாவரி கரையோர பாதுகாப்பு வீரர்கள் நீரில் மூழ்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் 25 பேர் தற்போது மீட்டுள்ளனர் மீதி உள்ளவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்களா ? அல்லதும் மூழ்கினார்களா என்று தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.