Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING : போட்ரா வெடிய … ”பிகில் படத்துக்கு அனுமதி” ரசிகர்கள் உற்சாகம் …!!

பிகில் பட சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதியளித்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

சமீபத்தில்தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்திக்கும் போது தீபாவளி சிறப்பு காட்சிக்கு எந்த படத்துக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் , தயாரிப்பு நிறுவனம் முறையான அனுமதி பெற்று அதிக கட்டணம் வசூலிக்கமாட்டோம் என்பதை உறுதியளித்தால் சிறப்பு காட்சிகள் குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.

Seithi Solai

இதோடு அதிக கட்டண வசூல் செய்வதால் தான் அரசு பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.இந்நிலையில்  நடிகர் விஜய் நடித்த பிகில் படத்துக்கு சிறப்பு காட்சி வழங்க அனுமதி வழங்க வேண்டுமென்று தயாரிப்பு நிறுவனமான  AGS கல்பாத்தி அகோரம் சார்பில் , பிகில் பட சிறப்பு கட்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென்று கடிதம் அனுப்பபட்டது.

மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்க பட மாட்டாது என்றும் அந்த கடிதத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.இதை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு நாளை ஒருநாள் மட்டும் பிகில் படத்திற்கு சிறப்பு காட்சி வெளியிட அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் அரசு வசூலித்த கட்டணத்தை மட்டும் வசூலிக்க வேண்டு என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் நடிகர் விஜய் ரசிகர்கள் மிக உற்சாகம் அடைந்துள்ளனர்.

Categories

Tech |