மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் 2020 – 21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துவருகிறார். இதில் பெரு நிறுவனங்கள், புதிய தொழில் நிறுவனங்கள், சிறு, குறு தொழில்கள் குறித்த ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இருப்பினும், பட்ஜெட் அறிவிப்புகளின் எதிரோலியாக இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துவருகின்றன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 987 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 39,735 புள்ளிகளில் இன்றைய வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல, தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 373 புள்ளிகள் சரிந்து 11,661 புள்ளிகளில் இன்றைய வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. இன்று காலை பட்ஜெட்டுக்கான அறிவிப்பு வந்தது முதலே முதலில் சிறிது ஏற்றமடைந்த பங்குசந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து நிறைவடைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.