இதில் நாங்குநேரி தொகுதியில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக கூட்டணி வேட்பாளர் நாராயணன் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதேபோல் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் , திமுக வேட்பாளர் புகழேந்தி, அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் உள்ளிட்ட 8 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.இந்நிலையில் பரபரப்பாக நடைபெற்று வருகின்ற இடைதேர்தல் பரப்புரை முடிந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
Categories