Categories
தேசிய செய்திகள்

#BREAKING : ”நீதிமன்றத்தில் ப.சிதம்பரம்”அழைத்து வந்தது சிபிஐ…!!

நீதிமன்றத்தில் ப.சிதம்பத்தை ஆஜர்படுத்த சிபிஐ அதிகாரிகள் வாகனத்தில் அழைத்து வந்துள்ளனர்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டிற்குள் கோட்டைச் சுவர் ஏறிக்குதித்து மடக்கி கைது செய்தனர். இந்த கைதை எதிர்த்து அவரின் வீட்டின் முன்பு காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.

 

மேலும் ப.சிதம்பரத்தை கைது செய்த அதிகாரிகள் அவரை இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்து சென்று அவருக்கு தேவையான மருத்துவ உதவி , உணவு என அனைத்தையும் வழங்கி விசாரணையை தொடங்கினர். சுமார் 3 மணி நேரம் வரை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தெரிகின்றது.

ப.சிதம்பரம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சிபிஐ தலைமை அலுவலகம் இருக்கும் அந்த சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதே வேளையில் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டமும் நடத்தப்பட்டது. இந்நிலையில் சிபிஐ_யின் 3 மணி நேர விசாரணையை தொடர்ந்து அவர்  டெல்லி ரோஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்டு இருக்கின்றார்.

 

இங்கே அவரின் தரப்பில் ஆஜராகும் கபில் சிபில் , அபிஷேக் சிங்வி , விவேக் தன்கா ஆகிய வழக்கறிஞ்சர்களும் நீதி மன்றத்தில் காத்திருக்கின்றனர்.ப.சிதம்பரத்தை காரில் அழைத்துக் கொண்டு சிபிஐ அதிகாரிகள்  நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர்.

Categories

Tech |