Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

BREAKING : ”கிரண்பேடிக்கு எதிரான உத்தரவு ரத்து” நடுங்கும் நாராயணசாமி ….!!

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு அதிகாரமில்லை என்ற உத்தரவை இரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கை மற்றும் உத்தரவுகளில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வரம்பு மீறி செயல்படுவதால் அவருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டுமென  MLA லட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆய்வுகள் நடத்துவது, உத்தரவுகளை பிறப்பிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும்  இச்செயல்கள்  மாநில அரசின் அதிகாரங்களில் நேரடியாக தலையிடுவதற்கு சமம் என்றும், இம்மாதிரியான செயல்கள் மோதலை ஏற்படுத்தக் கூடும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடவோ, உத்தரவுகளை பிறப்பிக்கவோ  துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அதிகாரம் இல்லை என்ற அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கிற்கு இன்று  தலைமை நீதிபதி ஏபி ஷாஹி ,  நீதிபதி சுப்பிரமணியம் தீர்ப்பு வழங்கினர். ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதி உத்தரவை இரத்து செய்து உத்தரவிட்டதோடு , கூட்டாட்சித் தத்துவத்தின் படி தெரிந்தெடுக்கப்பட்ட அரசுகளும், ஆளுநரும் இணைந்து செயல்பட ஐகோர்ட்டு அறிவுறுத்தியது. கருத்து வேறுபாடு பற்றி ஆளுநர் அனுப்பும் பரிந்துரைகள் மீது விரைந்து முடிவெடுக்க மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்து வைத்தது.

 

Categories

Tech |