Categories
மாநில செய்திகள்

BREAKING : கேன் குடிநீர் உற்பத்தியார்கள் ஸ்ட்ரைக் – தமிழக அரசு விளக்கம் …!!

தமிழ்நாடு கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

குடிநீர் கேன் உற்பத்தியாளர்களுக்கு அரசு லைசன்ஸ் அளிப்பதில்லை என்ற தகவலில் உண்மை இல்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உரிமையாளர்கள் மூன்றாவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்ட்டுள்ளது.

இந்த சூழலில் தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் முறையான அனுமதி இல்லாத ஆலை  உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் சீல் வைக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் எடுப்பதற்கு  சில வரையறைகளை ஏற்கனவே தமிழக அரசு அரசாணை மூலம் தெளிவு படுத்தியது. அதனை மீறி முறையற்ற நிலையில் நீர் எடுக்கப்படும் ஆலைகள் மூடப்படுவதாக அரசு சார்பில் சொல்லப்டுள்ளது.

 

Categories

Tech |