2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக 2 கோடியே 7 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக கூறி அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2008 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. 2008ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், எம்.பி, எம்.எல்.ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
2 கோடி ரூபாய் வருமானத்தை சட்டவிரோத பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியதாக கடந்த 2020 ஆம் ஆண்டு 14 ஆண்டுகளுக்கு பிறகு அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து, சட்டவிரோத பணப்பரிமாற்றம் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு…. அமல்படுத்துவதற்கு முன்பாக தனக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த சட்டத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது.
இதன் தொடர்பாக வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் அனிதா ராதாகிருஷ்ணன் சார்பில் கோரிக்க வைக்கப்பட்டது. அப்பொழுது அமலாக்கத்துறை தரப்பில் இடைக்கால தடை விதிக்க அவசியமில்லை என்றும், அதே சமயத்தில் இந்த வழக்கை விசாரணை நடத்தலாம்.
இறுதி அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது என்று மட்டுமே உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதி, அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை நடத்தி வரும் விசாரணைக்கு மறு உத்தரவு வரும் வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறார்கள்.