Categories
தேசிய செய்திகள்

#BREAKING : ”சிதம்பரத்தை நெருக்கும் CBI” 4 முறையாக வீட்டில் அதிகாரிகள் ….!!

டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் இல்லத்திற்கு 24 மணி நேரத்தில் 4 முறை சிபிஐ மற்றும் அமுலாக்கத்துறையினர் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டார்.ஆனால் அவரின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று அவரச வழக்காக விசாரணைக்கு வர இருக்கின்றது.

Image result for p.chidambaram

இந்நிலையில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் நேற்று இரவு 7.30 மணி முதல் ப.சிதம்பரத்தை தேடி வருகின்றனர். டெல்லியில் உள்ள அவரது இல்லத்துக்கு நேற்று இரவே சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குழுவினர் அடுத்ததுடுத்ததாக சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் ப.சிதம்பரம் இல்லை என்பதால் அதிகாரிகள் அவரின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டி வைத்தனர்.

இந்நிலையில் இன்றும் காலை 4_ஆவது முறையாக ப.சிதம்பரம் இல்லத்துக்கு வந்தனர். காலை வந்த அதிகாரிகள் தொடர்ந்து தேடி வருகின்றனர். இன்று காலை அவரின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வர இருக்கும் சூழலில்  சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினரின் இந்த நடவடிக்கை தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |