Categories
மாநில செய்திகள்

BREAKING : ஜெய்குமாருக்கு சிபிசிஐடி காவல் ? 2.30க்கு தீர்ப்பு ….!!

குரூப் 4 முறைகேட்டில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயக்குமாரை காவலில் எடுக்க கோரிய சிபிசிஐடி மனு மீது 2.30 மணிக்கு தீர்ப்பு வர இருக்கின்றது.

குரூப் 4 தேர்வு முறைகேடு , குரூப் 2A தேர்வு முறைகேடு என இரண்டு முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். 20க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்ட நிலையில் இதில் முக்கிய குற்றவாளிகளாக சொல்லப்பட்டு தலைமறைவாக இருந்த ஜெயக்குமார் நேற்று சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் சரணடைந்தார்.அவரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இன்று காலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தவிட்டது.

இதையடுத்து TNPSC முறைகேடு வழக்கு நடைபெறும் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று  ஜெயக்குமார் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஜெயகுமாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு செல்ல சம்மதமா ? என நீதிபதி கேட்டதற்கு நான் தவறு செய்யவில்லை என்று சொல்லி கண்ணீர் விட்டு அழுதார். அவரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் அனுமதி கோரிய மனு மீது எழும்பூர் நீதிமன்றம் 2.30 மணிக்கு தீர்ப்பளிக்கின்றது.

Categories

Tech |