பிரபல தமிழ் சீரியல் நடிகர் குட்டி ரமேஷ் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக திடீரென்று காலமானார்.
விஜய் டிவியில் பிரபல சீரியல்களில் ஒன்று தேன்மொழி சீரியல். இந்த சீரியலில் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி ஜாக்லின் நாயகியாக நடித்து வருகிறார். நாயகனாக சித்தார்த் நடித்து வருகிறார். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. 300 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி கொண்டு வருகின்றது. இந்த தொடரில் ஜாக்லின்க்கு அப்பாவாக நடித்து வரும் பிரபல நடிகர் ரமேஷ் என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவர் பல்வேறு சீரியல்கள், படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவரின் இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.