Categories
Uncategorized தேசிய செய்திகள்

BREAKING: மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு …!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆறு மாதத்திற்கு ஒருமுறை மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது. அந்த வகையிலே ஜூன் மாதம் வரையிலான அறிவிப்பு ஏற்கனவே அமைச்சரவை ஒப்புதல் உடன் அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து ஜூலை மாதத்தில் இருந்து புதிய அகவிலைப்படி அமல்படுத்த வேண்டிய நிலையில்,  அதற்கான ஒப்புதலை இன்று மத்திய அமைச்சரவை மூலம் கிடைத்துள்ளது.

நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு பலன் அளிக்கும். இதனால் மத்திய அரசுக்கு ஆண்டொன்றுக்கு பனிரெண்டாயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். அதாவது கிட்டத்தட்ட மாதம் ஆயிரம் கோடி ரூபாய் செலவு இருக்கும். அமைச்சரவை ஒப்புதல் குறித்து மத்திய அமைச்சர் அனுராதாக்தாகூர் இன்றைய தினம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு பேசிய அவர், இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் பலன் பெறுவார்கள் என தெரிவித்தார். இந்த முக்கிய அறிவிப்பை மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த வகையிலே இந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |