Categories
மாநில செய்திகள்

#Breaking:சாத்தன்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : அதிரடி உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட் கிளை ..!!

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிர் இழந்த வழக்கை விசாரித்து முடிக்க உத்தரவு பிறப்பிக்க கூறி செல்வராணி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். உயர்நீதிமன்ற மதுரை கிளை, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில்  நடைபெறும் சாத்தான்குளம் தந்தை,  மகன் கொலை வழக்கில் விசாரணையை ஆறு மாதத்திற்கு முடிக்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் ஆறு மாதத்திற்குள் விசாரணையை முடிக்க இயலவில்லை.

எனவே வழக்கு விசாரணையை முடிக்க மேலும் அவகாசம் வழங்கி  உத்தரவிட வேண்டும் என்று மதுரை கீழமை நீதிமன்றம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று மதுரை கிளை ஐந்து மாத காலம் கூடுதலாக அவகாசம் வழங்கி பிறப்பித்திருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று நீதிபதி முரளி சங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட நீதிமன்றம் தரப்பில்,  இந்த வழக்கில் 105 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதுவரை 40 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளன. கூடுதல்குற்றப்பத்திரிக்கை கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.105 சாட்சியங்களில் 55 முதல் 60 சாட்சிகள் வரை முக்கியமானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. வாரம் இரண்டு நாட்களுக்கு வழக்கு கீழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு விசாரிக்கப்பட்டு வருகின்றது.

குற்றவாளிகளாக கருதப்படும் ஒன்பது நபர்கள் வழக்கறிஞர்களும் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்வதால் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே நான்கு மாதங்கள் கூடுதலாக அவகாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நீதிபதி இறுதியாக 4மாதம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |