Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னை தி.நகர் கடைகள் அனைத்தையும் மூடுங்க – ஆணையர் அதிரடி உத்தரவு …!!

கொரோனா முன்னெச்சரிக்கை சென்னை தி.நகரில் உள்ள கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.

இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ்சை தடுக்க மாநிலம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மார்ச் 31ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை,  திரையரங்குகள் , திருமண மண்டபங்கள் , மால்களில் திறக்க வேண்டாம் என்று முதல்வர் உத்தரவிட்டு இருந்தார்.

மேலும் மக்கள் அதிகமாக கூட வேண்டாம் என்றும் , திட்டமிட்ட திருமண நிகழ்வுகள் மட்டும் நடத்துமாறு வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் சென்னை பெருநகர ஆணையர் உள்ளிட்ட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதையடுத்து சென்னை தி. நகரில் உள்ள அனைத்து கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. அதே போல சென்னையில் உள்ள பூங்காக்கள் மூட வேண்டுமென்றும்   ஆணையாளர் தெரிவித்துள்ளார். அவசியம் தேவை தவிர்த்து மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம்,  சென்னையிலுள்ள 3800 ATM சென்டர்களை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |