Categories
மாநில செய்திகள்

BREAKING: சென்னை மெட்ரோ ரயில் மார்ச் 22ஆம் தேதி ரத்து .!

சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது.

இதுவரை இந்த வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 206ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.

இந்த வைரஸ்சை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இந்நிலையில் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை 22ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது. சுய ஊரடங்கு கடைபிடிப்பது தொடர்பாக  பிரதமர் மோடி  வேண்டுகோள் விடுத்ததை  தொடர்ந்து இந்த நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |