Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் முதல்வர் ஸ்டாலின் தீடீர் உத்தரவு …!!

சைனாவில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையை இந்தியா மேற்கொண்டு வருகின்றது. வடஇந்தியாவில் ஒரு சில இடங்களில் பிஎஸ் 7 என்கின்ற புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், மத்திய சுகாதாரத்துறை தமிழக அரசுக்கும், அனைத்து மாநிலங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை தொடர்ந்து,  தமிழ்நாட்டில் முதலமைச்சர் முக.ஸ்டாலின்  தலைமையில் கடந்த 22ஆம் தேதி கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசு மருத்துவமனைகள்,  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள்,  மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் முதல்வர்கள் ஆகியோருக்கு தமிழக மருத்துவ கல்வி இயக்குனரகம்  சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி வரும் ஆறு மாத காலத்திற்கு தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்திலிருந்து தேவையான மருந்து,  மாத்திரைகளை வாங்கி கொள்ள வேண்டும். முக்கியமான மருந்து,  மாத்திரைகள்,  RTPCR கிட் ஆகியவற்றை தேவையான அளவு கொள்முதல் செய்ய  சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதே போல தேவையான ஆக்ஸிஜன் வசதி,  வெண்டிலெட்டர்கள் உள்ளிட்டவற்றை  தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மருத்துவ கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

Categories

Tech |