தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தற்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின் திட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்க கூடிய இலவச மின்சாரம் கொடுக்க கூடிய அம்சம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை திருத்தி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுள்ளது. இது தொடர்பாக கடந்த ஒரு வாரத்துக்கு முன்பும் கூட ஒரு கடிதம் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எழுதி இருந்தார்.
இந்த நிலையில் தான் தற்போது ஒரே கடிதம் எழுதப்பட்டுள்ளது. இலவச மின்சாரம் கொடுக்க கூடிய அம்சம் பாதிக்கப்ட்டுள்ளதுக்கு தமிழக அரசு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் சுயசர்வு திட்ட அறிவிப்பு நன்றி தெரிவித்துள்ள தமிழக முதல்வர், விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் முடிவை தமிழக அரசிடமே விட வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.