ஜூம்மு காஷ்மீர் லடாக்கில் சீனாவுடனான மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியா – சீனா எல்லையில் சமீபத்திலேயே பதற்றம் இருந்ததை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது நமக்கு நன்றாகவே தெரியும். அந்த பேச்சுவார்த்தையின் போது காஷ்மீர் கல்வான் பள்ளத்தாக்கு பகுதி மற்றும் அங்குள்ள பாங்காங் ஏரி ஆகியவற்றில் இருந்து இந்திய படைகள், சீனப் படைகள் விலகிச் செல்ல வேண்டும். ஒருவருடன் ஒருவர் அந்த இடத்தில் மோதலில் ஈடுபட கூடாது என்று முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து பாங்காங் ஏரி பகுதியில் இருந்தும் கல்வான் பள்ளத்தாக்குகளிலும் சீன ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் பின்வாங்க தொடங்கியிருந்தார்கள். அதேபோல இந்திய ராணுவ வீரர்கள் தங்களுடைய வழக்கமான ரோந்து பாதைகளுக்கு திரும்பிச் செல்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த சமயத்திலே நேற்று இரவு மீண்டும் இந்திய படைகள் மற்றும் சீனா படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும், உரசல் ஏற்பட்டதாகவும் கொஞ்சமாக இருந்த பிரச்சினை பெரியதாகி உள்ளது. முன்பு கைகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டும், கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொன்டும் இருந்த நிலையில் தற்போது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
துப்பாக்கியில் மட்டுமல்லாமல் கனரக பீரங்கிகளையும்வைத்து ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழக்கிறார், இதுதவிர இரண்டு வீரர்களும் வீர மரணம் அடைந்துள்ளார்கள் என்று ஆரம்பக்கட்ட தகவல் டெல்லிக்கு வந்து இருக்கிறது. இதனால் இரு நாடுகளின் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.