22 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் கோயம்பேடு மார்க்கெட் செயல்படாது என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
சுய ஊரடங்கை கடைப்பிடிக்க பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளதால் 22ஆம் தேதி கோயம்பேட்டில் இருக்கக்கூடிய எந்த கடையும் செயல்படாது என்று வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு விஷயங்களை அறிவித்திருந்தார். மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்கவேண்டும். வெளியில் யாரும் வரக்கூடாது. 22ஆம் தேதி அனைவரும் வீடுகளிலே இருக்க வேண்டுமென பல்வேறு உத்தவரை சொல்லி இருந்த நிலையில் இதனைக் கடைபிடிக்கும் வகையில் 22ஆம் தேதி வரை மட்டும் கோயம்பேடு காய்கறி சந்தையில் மூடப்படும் என்ற அறிவிப்பு வியாபார சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.