கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு முக்கிய ஆலோசனை ஈடுபட்டு இருக்கிறார்.
கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தவுடனே நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட டிஜிபி சைலேந்திரபாபு தற்போது தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனைகள் ஈடுபட்டு இருக்கிறார். தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு உள்துறை செயலாளர் பனீந்திர ரெட்டி, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதத்துடன் தற்பொழுது தலைமைச் செயலத்தில் ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தமிழக காவல்துறை என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலம் முழுவதும் எவ்வாறு கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பை எப்படி பலப்படுத்துவது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக முதலமைச்சருடனும் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிகிறது. இன்று மாலை அதற்கான கூட்டம் இருக்கும் என்று தெரிகிறது.
தமிழகத்தில் கோவையில் காரில் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்போடு தொடர்பு இருப்பதாக தெரியவந்திருக்க கூடிய நிலையில், தலைமைச் செயலாளர் நேரடியாக இந்த விஷயத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து தெரிந்து கொள்வதற்காக நடைபெறும் இந்த ஆலோசனையில் இது தொடர்பான விவரங்களை எல்லாம் கேட்டறிந்து வருகிறார்.
கூடுதலாக இந்த விஷயத்தில் என்ன செய்ய வேண்டும் ? தமிழக காவல்துறை குறிப்பாக உபா சட்டத்திலேயே வேற என்ன விஷயங்களை சேர்க்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமல் இருப்பதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து இதில் ஆலோசனைக்கப்பட்டு வருகிறது.