Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : காங்கிரஸ் எம்பிக்கள் 7 பேர் இடைநீக்கம் …!!

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 மக்களவை உறுப்பினரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

மக்களவை மற்றும் மாநிலங்களவை தொடங்கியது முதல் காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து சொல்லி வரும் ஒரே கோரிக்கை என்னவென்றால் டெல்லியில் நடந்த மதக் கலவரம் குறித்து முதலில் விவாதம் தேவை.அதற்கு பிறகு தான் மற்ற விவகாரங்களை அனுமதிக்க முடியும் என்று சொல்லியிருக்கிறார்கள்.இதனால் மற்ற அலுவல்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டிருந்தது. கூச்சல் குழப்பம் இடையே ஒரு சில அலுவல்களை மட்டும் சபாநாயகர்  நடத்திக்கொண்டிருந்தார்.

அப்படிப்பட்ட நிலையில்தான் கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோபத்துடன் சபாநாயகர் ஓம்பிர் லா இருக்கையை முற்றுகையிட்டு, சபாநாயகர் இருக்கையில் இருந்த ரமாதேவியின் கையில் வைத்திருந்த ஆவணத்தை கிழித்தெறிந்தார்கள். இதன் காரணமாக தற்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த  மாணிக் தாகூர் , கவுர் கோகாய் , பிரதாபன் , தீன் சூரிய கோஸ், உண்ணிதன் உட்பட 7 மக்களவை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |