Categories
சேலம் மாநில செய்திகள்

BREAKING : சேலம் ரயிலை கவிழ்க்க சதி..?

சேலத்தில் இரயில் தண்டவாளத்தில் உள்ள கொக்கிகள் அகற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டையில் இரயில் தண்டவாளத்தில் கான்க்ரீட்_டுடன் இணைக்கும் இணைப்பு கொக்கிகள் அகற்றப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ரயில்வே நிர்வாகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்ட அடிப்படையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் . மர்மமான முறையில் அகற்றப்பட்டது குறித்த விசாரணையை அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர்.

Image result for ரயில் தண்டவாள கொக்கிகள்

தொடர்ந்து 200 மீட்டர் தொலைவில் அங்கங்கே என்று 40 இடங்களில் இந்த கொக்கிகள் அகற்றப்பட்டுள்ளதால் இது இரயிலை கவிழ்க்க சதியாக இருக்குமோ என்று விசாரணை நடைபெற்று வருகின்றது. அதிகம் இரயில் போக்குவரத்து இந்த இரயில் தண்டவாளத்தில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அருகில் உள்ள CCTV கண்காணிப்பு கேமராக்களை போலீஸ் ஆய்வு செய்து வருகின்றனர். முன்னதாக அதிகாரிகள் இதை கண்டறிந்ததால் பெரிய விபத்து தடுக்கப்பட்டது.

Categories

Tech |