கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வர தடைவிதித்து அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை எதிர்த்து தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. இரண்டு நீதிபதிகள் அமர்வில் நடந்த இந்த வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கி உள்ளார்கள்.நீதிபதி ஹேமந்த் குப்தா ஹிஜாபுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு ஆதரவாகவும், நீதிபதி சுதான்ஷீ துலியா ஹிஜாபுக்கு விதிக்கப்பட்ட தடை செல்லாது எனவும் தீர்ப்பளித்துள்ளார்.
எனவே இந்த வழக்கானது லார்ஜர் பெச்சுக்கு மாற்றம் செய்யப்படும். அதாவது மூன்று நீதிபதி அமர்வு, 5 நீதிபதி அமர்வு, 7 நீதிபதி அல்லது 9 அல்லது 11 இப்படின்னு பெரிய பெஞ்சுக்கு மாற்றுவார்கள். அந்த தகவல் இனி தான் தெரியவரும். அந்த பெரிய பெச்சுக்கு மாற்றும்போது, வெறுமனே இந்த வழக்கை மட்டும் விசாரிக்காமல், இதில் இருக்கக்கூடிய அரசியல் சாசனம் சார்ந்த குழப்பங்கள் மற்றும் தெளிவுபடுத்த வேண்டிய அம்சங்களையும் அவர்கள் பட்டியலிட்டு, கேள்விகளாக முன்னிறுத்துவார்கள்.
இஸ்லாம் மதத்தில் ஹிஜாப் அணிந்து வருவது அவர்களது அடிப்படை உரிமையா ? என்ற கேள்வி எழுப்பப்படலாம். மதம் சார்ந்த உரிமைகளை பள்ளி மற்றும் கல்லூரிகளில் சீருடை விவகாரங்களில் ஒரு அரசு தலையிட முடியுமா ? இப்படி என்ற கேள்வி எழுப்பலாம். இப்படி நிறைய கேள்விகளை முன்வைத்து வாதம் பிரதிவாதம் நடத்துவார்கள். இரு நீதிபதிகள் தீர்ப்பில் உள்ள நிறைய கேள்விகளுக்கு பெரிய பெச்சு பதிலை தேடி கண்டுபிடித்து, அதற்குப் பிறகுதான் இந்த வழக்கிற்கான தீர்ப்பு என்பது வரவும்.
எனவே இந்த விவகாரம் வெறும் ஹிஜாப் விவகாரமும் மட்டுமல்லாமல், அரசியல் சாசனம் சார்ந்த விவகாரமாகவும் மாறி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். வரக்கூடிய முக்கியமான தருணங்களில் மதம் சார்ந்த விஷயங்களில் கல்வி நிறுவனங்களுக்குள்ள எந்த அளவுக்கு அரசு போக முடியும். இந்த மாதிரியான நிறைய கேள்விகளுக்கு விடை காணும் ஒரு விஷயமாகவும் இந்த வழக்கு இனி வரும். அந்த வகையில் ரொம்ப ரொம்ப எதிர்பார்த்த தீர்ப்பு வந்திருக்கிறது.