Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

#BREAKING: பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு – தமிழக அரசு அறிவிப்பு …!!

தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதற்கான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்திருக்கிறது. குறிப்பாக காற்று மாசுபடாத வகையில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகளை வலியுறுத்தி இருக்கிறது. பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் கொடுத்திருக்கக்கூடிய உத்தரவின்படி நிபந்தனைகளானது விதிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் உச்ச நீதிமன்ற ஆணையில் பட்டாசு வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படும். அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவித்திருந்தது. இந்த நிலையில் தான் தீபாவளி பண்டிகை அன்று காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையும்,  இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதியானது வழங்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |