Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : ”தமிழகத்தில் 6 பேருக்கு கொரோனா” 6 பேரும் வெளியில் இருந்து வந்தவர்கள் ….!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்தவருக்கு முதன்முதலாக கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார். தற்போது கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து டெல்லியில் இருந்து வந்தவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இரண்டு தினங்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அயர்லாந்தில் இருந்து தமிழகம் வந்தவருக்கு 3ஆவது நபராக கொரோனா உறுதி செய்யப்பட்டது.

2ஆவது , 3ஆவது என இவர்கள் இருவரும் மருத்துவ கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டு  தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6ஆக அதிகரித்தது.

இதில் இரண்டு பேர் தாய்லாந்தில் இருந்து வந்தவர்கள், ஒருவர் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் இவர்கள் 6 பேரும் வெளியில் இருந்து வந்தவர்கள் என்று தெரிவித்துள்ள சுகாதாரத்துறை இவர்களுக்கு கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |