Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING : கொரோனா தடுப்பு : டிரம்ப் முக்கிய அறிவிப்பு …!!

அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஒரு முக்கிய அறிவிப்பை அறிவிக்க போவதாக ட்வீட் செய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று ஒருமுறை செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் மிக முக்கியமான அறிவிப்பை வெளியிடப்போவதாக ட்வீட்டரில் தெரிவித்துள்ளார். அவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அதனை தாங்கும் வகையில் 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி தேவைப்படுகின்றது என்ற தகவலை குறிப்பிட்டிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதித்தவருக்கு 70 ஆயிரம் ரூபாய் 1000 டாலர்கள் அளவிற்கு ஊக்கத்தொகை வழங்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.  அதே போல அங்கு இருக்கும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் புதிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக தெரிவித்தார்.அமெரிக்காவின் சியாட்டில் நோய் தடுப்பு , மருந்துகள் , சிகிச்சை தொடர்பான அமைப்பு  உள்ளது.

நேற்று தடுப்புமருந்து காண ஒரு ஆராய்ச்சி அங்கு தொடங்கப்பட்டது. கொரோனா சிகிச்சை தொடர்பான தடுப்பூசி மனிதனுக்கு செலுத்தி ஆராயப்பட்டது. இந்நிலையில் தான் அதிபர் டிரம்ப் முக்கிய அறிவிப்பு வெளியிட போவதாக தெரிவித்துள்ளார்.

அவர் ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்தை வைத்து பார்த்தோமானால் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தாகத்தான் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது. இது குறித்து செய்தியாளர் சந்திப்பு நடத்தி டிரம்ப் அறிவிக்க உள்ளார். உலகே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் கொரோனா மருந்து அமெரிக்கா அதிபரின் அறிவிப்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |