தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1500யை தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் பெரும் தொற்று நோயாக பரவி கொண்டிருக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில் நாளுக்குநாள் குணமாகி வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் மக்களிடையே புது நம்பிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தின் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு தமிழக சுகாதாரத்துறை சார்பில் கொரோனா குறித்த அப்டேட் வெளியாகும்.
அந்த வகையில் இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் தமிழக்த்தில் இன்று ஒரே நாளில் 6109 பேருக்கு டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் 46,985 பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1520 ஆக அதிகரித்துள்ளது. அதே போல இன்று ஒரே நாளில் 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 457 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 1043 பேர் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்றுவரும் நிலையில் 6 பேர் கொஞ்சம் மோசமாக இருக்கின்றனர். அதே போல மருத்துவர் உட்பட 2 பேர் மரணமடைந்துள்ளதில் தமிழகத்தில் உயிரிழப்பு 17ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 20 அரசு ஆய்வகம், 10 தனியார் ஆய்வகம் உட்பட 33 ஆய்வகங்களுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.