கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமுலுக்கு வந்தது.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அடுத்து இன்று மாலை 6 மணிக்கு 144 தடை உத்தரவை அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி தற்போது 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இதனால் 5 பேருக்கு மேல் கூட கூடாது.
அதுமட்டுமல்லாமல் மாவட்ட எல்லைகள் தற்போது 6 மணி முதல் மூடப்படுகின்றன.இதன் மூலமாக மாவட்ட போக்குவரத்து , மாநில போக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்படுகிறது. 144 தடை உத்தரவு மூலமாக அத்தியாவசிய மற்றும் அவசர பணிகளை தவர மற்ற பொதுப் போக்குவரத்தை, தனியார் போக்குவரத்து, ஆட்டோ டாக்ஸி போன்றவை இயங்காது.