Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

#Breaking: சென்னையில் 22 காவலர்களுக்கு கொரோனா …!!

சென்னையில் 22 காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தலைநகர் சென்னையில் கடந்த 6 நாட்களாக 103, 94, 138, 176, 174 ,203 என்ற எண்ணிக்கையில் மட்டும் 888 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு கொரோனாவின் கூடாரமாக மாறியுள்ளது. சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக 8 மாவட்டங்களில் 321 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

தொடர்ந்து கொரோனா நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது சென்னையில் காவல்துறை அதிகாரி உட்பட 22 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் பரவலாக கொரோனா பாதித்த காவலருக்கு பதிலாக மாற்று பணியாளரை நியமிக்கவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |