Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : ”276 இந்தியர்களுக்கு கொரோனா” மத்திய அரசு தகவல் …!!

276 வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு கொரோனா நோய் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,000 க்கும் மேல் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 122 பேர் இந்தியர்கள், 25 பேர் வெளிநாட்டினர்கள் ஆவர்.மேலும் 14 பேர் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று குணமாகியுள்ளனர்.

இதேபோல வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் 276 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஈரான் , ஐக்கிய அரபு அமீரகம் , இத்தாலி , குவைத் , இலங்கை ருவாண்டாவில்உள்ள 276 இந்தியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரானில் 255, ஐக்கிய அரபு அமீரகத்தில் 12, இத்தாலி 5, குவைத் , ருவாண்டா , இலங்கையில் தலா ஒரு இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Categories

Tech |